கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் ! என்று கடன் பெற்றவர்களின் நிலையை கம்பர் இலக்கிய
நயத்துடன், தனது இலக்கியத்தில் செல்லியிருப்பார் .
பெரியவர்களும் நெருப்பு , பகை, கடன் ஆகியவைகளை மிச்சம் வைக்க கூடாது அப்படி வைத்தால் அது அவர்களது கழுத்தை நெரிக்கும் என்று எச்சிரிக்கை செய்துள்ளனர்.
கேள்வி :
சரி ஜாதக ரீதியாக மீள கடனில் மூழ்கிவிடும் ஜாதக அமைப்பை சேர்ந்தவர்கள் என்ன செய்தால் கடனில் இருந்து மீண்டு நல வாழ்வினை பெற முடியும் ?
இதற்க்கு சரியான வழி என்ன ? மேலும் பொருளாதார வாழ்க்கையில் தன்னிறைவு பெறுவது எப்படி ? இதற்க்கு ஜோதிட ரீதியான தீர்வுதான் என்ன ? ஜோதிடம் இந்த சிரமத்தில் இருந்து விடுபட வழி காட்டுகிறதா ?
பதில் :
நிச்சயம் இதற்க்கு ஜோதிடம் சரியான வழிகாட்டுதலை வழங்குகின்றது , சுய ஜாதகத்தில் இரண்டாம் வீடு , ஆறாம் வீடு என இருவீடுகள் முறையே 6 , 8 , 12 பாவத்துடன் தொடர்பு பெறுமாயின்
ஜாதகர் கடன் சுமையால் தத்தளிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்,
ஆறாம் வீடு எந்த பாவத்துடன் சம்பந்தம் பெறுகிறதோ அந்த பாவ
அதிபதியாக வரும் கிரக சக்தியை ஜாதகர் உயிர்கலப்பு பெற்றால்
ஜாதகரின் வாழ்க்கை கடன் நிலையில் இருந்து வெகு விரைவில்
மீண்டு பொருளாதார வாழ்வில் ஏற்றம் பெறுவார் .
ஜாதகர் எவ்வளவு பெரிய கடன் சுமையால் பாதிக்க பட்டிருந்தாலும்
காஞ்சிபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்துவரும் காமாட்ஷி அம்மனை,
ஒரு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி
வழிபடுவோர்க்கு, நிச்சயம் கடன் சுமையில் இருந்து மீட்டு
சகல யோகமுடன் மன நிறைவான வாழ்வினை தருவாள் என்பது
கண்கூடாக கண்ட உண்மை . சுய ஜாதக அமைப்பில் இந்த நிலையால்
பாதிக்க பட்டவர்கள், இதை செய்து பாருங்கள் உங்களின் வாழ்வில்
அபரிவிதமான முன்னேற்றமும், மன நிறைவான வாழ்வினையும் பெறுவீர்கள் இது நிச்சயம் நடக்கும் .
மேலும் சில குறிப்புகள் :
சுய ஜாதக அமைப்பில் இரண்டாம் வீடு , ஆறாம் வீடு என இருவீடுகள் முறையே 6 , 8 , 12 பாவத்துடன் தொடர்பு பெறுமாயின்
ஜாதகர் முடிந்த வரை கடன் பெறாமலே வாழ்க்கை நடத்துவது நலம் தரும் அதாவது உள்ளதை கொண்டு சிறப்பாக வாழ்வது . ஒரு வேலை கடன் வாங்கும் நிர்பந்தம் ஏற்ப்படுமாயின், செவ்வாய் கிழமைகளில் கடன் பெறுவதும், கடனை திருப்பி செலுத்துவதும் கடனில்லாத வாழ்வை தரும் .
கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள்
சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு
பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய்
ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும்,
சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும்
குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும்
நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில்
பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன்,
வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம்
கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக...
இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள்
ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும். ஜோதிட முரசு மிதுனம் செல்வம்
சனியும்,
செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம்
மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள். அது
மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு
1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்.
இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன. அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.
அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்) யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும் இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்

கலியுகம்
என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும்
கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை
சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
மேலும் விளக்கம் பெற நேரில்
அணுகவும் :
P.K.Jasvinthan,B.Com.,M.A (Astrology)
Astro Numerologist
No,30.Nadi Complex,M.C.Road,
Thanjavur-613 007.
Mobile:96008 5367
No comments:
Post a Comment