Tuesday, 10 September 2013

உண்மையான சோதிடர் யார்?



----------------------------
வேதங்களின் ஆறு அங்கங்களுள் ஒன்றாகிய சோதிடத்துக்கும் குரு பாரம்பரியம் வேண்டும். ஒரு நல்ல சோதிடருக்கு பின்வரும் ஐந்து அம்சங்கள் இருக்கவேண்டும்.

1. குரு பாரம்பரியம் வேண்டும்.

இப்போது ஓய்வு பெற்ற பலர் ஒருவாறு பஞ்சாங்கம் பார்க்கத் தெரிந்து ஒன்றிரண்டு சோதிடப் புத்தகங்களைவாசித்து அறிந்துவிட்டு சோதிடராக உலா வருகின்றார்கள். இது பணம் சம்பாதிக்கமட்டுமல்...ல மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கவும் ஒரு சுலபமான வழி. அடுத்தமுறை ஒரு குடும்ப ஒன்றுகூடலிலோ அல்லது விழாவிலோ நீங்கள் ஒருவருக்கு கை ரேகை சோதிடம் அல்லது எண் சோதிடம் சொல்லிப் பாருங்கள்; கொஞ்ச நேரத்தில் எத்தனை பேர் உங்களைச் சூழ்ந்து கொள்வார்கள் என்று. நீங்கள் புறப்படும்போது பலருக்கு உங்கள் தொலைபேசி இலக்கம் வேறு கொடுத்துவிட்டு வரவேண்டியிருக்கும். இதற்கு எந்தவித சோதிடமும் தெரிந்திருக்கத் தேவையில்லை.

2. வாக்கு சித்தி வேண்டும்.

இதற்கு சோதிடருடைய சாதகத்தில் இரண்டாமிடமாகிய வாக்குத்தானம், அதன் அதிபதி என்பன பலம் பெற்றிருக்க வேண்டும். இது சோதிடத்துக்கு மட்டுமல்ல வைத்தியம், வர்த்தகம், அரசியல் போன்ற எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.

3. சோதிடருடைய சாதகத்தில் அவருக்கு சோதிடம் கை வருவதற்குரிய பலன் இருக்க வேண்டும்.

குறிப்பாக புதன் பலம் பெற்று நன்னிலையில் இருக்க வேண்டும். குரு நன்னிலையில் இருந்தாலும் சோதிடக்கலை கை வரும்.பத்தில் கேது தனித்து இருத்தல் சிறப்பு

4. தெய்வ வழிபாடு இருக்க வேண்டும்.

சோதிடம் வேதங்களின் ஆறு அங்கங்களில் ஒன்று. இது ஒரு தெய்வீகக் கலை. ( எக்கலை தெய்வீகம் இல்லை என்று கேட்காதீர்கள்) இதை பாவித்து பலன் சொல்லுபவர்கள் தினமும் தவறாது தமது தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை வழிபாடுகள் செய்து ஒழுகி வர வேண்டும். ஏனென்றால் சோதிடம் ஒரு வழிகாட்டலே தவிர முடிந்த முடிபல்ல. தெய்வ சித்தம் என்பது எல்லாவற்றையும் மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தது. இதில் பல அனுபவங்கள் உள்ளன.

5. ஆதரவாக ஆலோசனை சொல்லும் பாங்கு வேண்டும்.

சில சோதிடர்கள் உனது குடும்பம் இந்த வருட இறுதிக்குள் பிரியும் என்றும்; உனது தாயார் இந்த மாத இறுதிக்குள் காலமாவார் என்றும்; உனது துணைவி உன்னை விட்டு நீங்குவார் என்றும் சோதிடம் சொல்லி அனுப்புவதை பார்க்கிறோம். அவர்கள் கணிப்பில் தவறில்லை. ஆனால் அதை சொல்லும் விதம் தவறு.
 
P.K.Jasvinthan,B.Com.,H.d.c.a.,M.A(Astro)
Astro Numerologist,
No.30,Nadi Complex,First Floor,Kanagasabai Nagar,                
Municipal Colony-Bus Stop,Medical College Road,
Thanjavur-613 007.Tamil nadu,India.
Cell:  96008 53667,
Email: pkjasvinthan@gmail.com

No comments:

Post a Comment