மார்ச்
20: தஞ்சை மாவட்டத்தை சிறந்த சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என, தமிழக தேசிய ஆன்மிக
மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கட்சியின் முதல் மாநில மாநாடு, ஸ்ரீ ஜயேந்திரரின்
77-வது ஜயந்தி விழா தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின்
மாநிலத் தலைவர் பா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில் ஸ்ரீ ஜயேந்திரர்
பேசியது: ஏற்கெனவே ஜன கல்யாண் என்ற அமைப்பை ஏற்படுத்தி பலருக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தி
தரப்பட்டது. இந்தக் கட்சி தெய்வீகத்தையும், தேசியத்தையும் ஒருங்கிணைக்கும் விதமாகத்
தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக பக்தியுடன், தேச பக்தியும் இருக்க வேண்டும். நம்
நாடு ஒரே நாடு என்ற உணர்வு நம்மிடம் ஏற்பட வேண்டும். அரசியல் மூலம் பல வேற்றுமைகள்
வரும். அதில், நாம் கலந்துவிடக் கூடாது என்றார் ஜயேந்திரர். பின்னர், சமூக சேவை புரிந்தவர்களுக்கு
விருதும், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 77 லட்சம் வங்கிக் கடனும் வழங்கப்பட்டன. மாநாட்டில்,
தஞ்சை மாவட்டத்தில் பெரிய கோயில், சரஸ்வதி மஹால் நூல் நிலையம், நவகிரஹ தலங்கள் எனப்
பல உள்ளன. எனவே, இந்த
தஞ்சையை சிறந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்த வலியுறுத்தல்
மாவட்டத்தை
சிறந்த சுற்றுலா தலமாக விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில்
கிடைக்கும் மூலப் பொருள்களைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு தொழில்சாலைகளை ஏற்படுத்த வேண்டும்.
திருக்கோயில்களில் அரசியல்வாதிகள் அல்லாத ஆன்மிகவாதிகளை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சியின் மாவட்டத் தலைவர் எஸ். கஜேந்திரன்,
செயலர் பி.கே. ஜஸ்விந்தன், பொருளாளர் எஸ். தேசிங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment